கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்?

 

Coronavirus Patients Live Tracker – Coronavirus (COVID-19) Today Updates

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 177 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 5,98,245 பேருக்குப் பரவியுள்ளது. 27,762 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 1,31,777ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071-ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

அதனையொட்டி தமிழகம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை ( ஊரடங்கு சட்டம் ) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரோனா நோயினால் இந்த அளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படவில்லை, தெளிவு பிறக்கவில்லை. பொது இடங்களில் மிகச்சர்வசாதாரணமாக சுற்றித்திரியும் மக்கள் ‘நமக்கு எல்லாம் இந்த வியாதி வராது’ என்ற அதித நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். ஒருபுறம் குணமடைந்து வந்தாலும் மறுபுறம் இத்தொற்றுக்கு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. எனவே உலக சுகாதார நிறுவனமும், சுகாதாரத்துறை நிபுணர்களும், மருத்துவர்களும் மக்களை விழிப்புணர்வு கொள்ளும் வகையில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸின் புள்ளி விவரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு எப்படி தொடங்கும்? நாளுக்கு நாள் அதன் வீரியம் எப்படி வெளிப்படும்? ஆகிய விவரங்களை நாம் தெரிந்துக் கொள்வோம்.

பலரும் கொரோனா பாதிப்பு வந்த பிறகு 14 நாட்கள் கழித்துதான் அறிகுறிகள் தெரியும் என தவறாக நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் கீழே உள்ள விவரங்கள் அதற்கு முற்றிலும் வேறாக உள்ளதை நீங்களே உணரலாம். ஆனால் இதுதான் நோய்

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன? தாக்குதலுக்கான சரியான விவரங்கள். கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்? என்பன போன்ற மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கான விவரங்களை இவ்விடம் தெரிந்து கொள்வோம்.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன?

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன?

முதல் 3 நாட்கள் – சளி, லேசான காய்ச்சல், சிலருக்கு தொண்டைவலி, வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல் உணர்வு

4 ஆம் நாள் – தொண்டை வலி அதிகரிக்கும், குரல் கரகரப்பாகும், காய்ச்சல் அதிகரிக்கும், சாப்பிடமுடியாது.

5 ஆம்நாள் – தொண்டை வலி அதிகரிக்கும், சாப்பிடும்போதும், விழுங்கும்போதும் வலி, உடல்வலி

6 ஆம் நாள் – காய்ச்சல் அதிகரிக்கும், வறட்டு இருமல், தொண்டைவலி, பேசும்போதும், விழுங்கும்போதும் வலித்தல், மூச்சுவிடுதலில் சிரமம்

7 ஆம் நாள் – காய்ச்சல் மேலும் அதிகரிக்கும், உடல்வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரிக்கும்.

8 ஆம் நாள் – மூச்சுவிடுவது கடினமாகும். நெஞ்சு அடைக்கும். இருமல், தலைவலி, மூட்டுகளில் வலியுடன், ‌அதிக காய்ச்சல்

9 ஆம் நாள் – அனைத்து அறிகுறிகளும் தீவிரமடையும். எனவே நோய் இந்தளவுக்கு தீவிரமடையும் வரை காத்திருக்காமல் சாதாரண சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் மூச்சுவிடுதலில் சிரமம், நெஞ்சில் வலி தோன்றும்போது அலட்சியம் காட்டாமல் மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியம்.

இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை. தமிழகத்தில் அவ்வளவாக இந்த வைரஸ் தொற்று இல்லை என்று அலட்சியம் கொள்ளாமல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.

 

வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?

உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள்,

மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும். நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களை நீங்களே தனிமை செய்து கொள்ளுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

 

கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?

கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.

56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:

6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. – சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை.

80% பேருக்கு மிதமான அறிகுறிகள் – காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

கொரோனா வைரஸ்க்கான மருந்து விவரங்கள் என்ன? மருந்து கண்டுபிடிப்பு எந்த நிலையில் இருக்கு?

சீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் ( ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளையும்) இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது. இப்படி தான் விலங்குகளிடைருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இன்று வரை கொரோனா வைரஸ் குணப்படுத்த மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருத்துவர்கள் பழைய ஆன்டி வைரல் மருந்துகளை மேம்படுத்தி புதியதாக ஒன்றை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். சிலர் இன்னும் காலப்போக்கில் இந்த வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த சில தொழில்நுட்பங்கள் மருத்துவ அறிவியல் இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எய்ட்ஸ்ஸை விட இந்த வைரஸ் தொற்றுக்கு ஏன் இந்த பதட்டம் என்றால் இது வேகமாக பரவும் முறை தான். இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போது நீர்த்திவலைகள் வழியாக வேகமாக பரவுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பொருளை தொட்டு தடவும் போது அதே பொருளை மற்றவரும் தொடும் போது எளிதில் பரவும். இதனால் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் இதற்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்க களம் இறங்கியுள்ளது.

கொரோனா தொற்றை கையாள இந்தியா தயாராக உள்ளதா?

உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?

ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, இரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது.

இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.